May 3, 2018
தண்டோரா குழு
ரயில் கழிவறை நீரைப்பிடித்து, தேநீர், காபி சப்ளை செய்யும் கேனில் கலந்தது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
அந்த வீடியோவில் ரயிலில் டீ விற்கும் ஊழியர் ஒருவர் கழிவறையில் இருந்து தண்ணீரை கொண்டு டீ கேனை நிரப்பிக் கொண்டிருக்கும் காட்சி இருந்தது.இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் ரயில்வே நிர்வாகிகளிடம் புகார்கள் கொடுத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தியது.விசாரணையில் இச்சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் சென்னை – ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸில் நடந்தது என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து சமந்தப்பட்ட டீ விற்பனையாளரின் விவரம் சேகரிக்கப்பட்டது.அதில் இந்த ஊழியர்களை ஒப்பந்தம் செய்து வைத்திருந்த உணவு தயாரிக்கும் ஒப்பந்ததாரர் காசிப்பேட் பி.சிவபிரசாத் என்பது தெரிய வந்தது.இதனையடுத்து அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.