April 23, 2018
தண்டோரா குழு
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில் குடும்பத்தினருடன் பயணித்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில் குடும்பத்தினருடன் பயணித்த 9 வயது சிறுமிக்கு நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் தொல்லை கொடுத்திருக்கிறார்.அப்போது அந்த சிறுமி கதறி அழுது பெற்றோரை எழுப்பி,தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதை சொன்னதும் அந்த நபரை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து,காவல்துறை அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பதும்,அவர் 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டதும் தெரியவந்ததது.