• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயிலில் இருந்து தவறி விழ இருந்த பயணியை பாத்திரமாக ஏற்றி விட்ட காவலரை பாராட்டி பரிசளித்த நிலைய இயக்குனர்

November 28, 2019 தண்டோரா குழு

கோவை மங்களூர் ரயிலில் இருந்து, தவறி விழ இருந்த பயணியை , பாத்திரமாக ஏற்றி விட்ட காவலரை நிலைய இயக்குனர் பாராட்டி பரிசளித்தார்.

கோவையில் இருந்து மங்களூர் செல்லும், கோவை – மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை கோவை ரயில் நிலையம் நடைமேடை எண் 3 ல் இருந்து , காலை 6.40 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட ரயிலில் மங்களூர் செல்ல வந்த கனவன், மனைவி , மகன், என குடும்பத்தினர், ஓடும் ரயிலில் பைகளுடன் ஏற முயன்றனர். அப்போது கணவன் மற்றும் மகன் ஏறிய நிலையில் பின்னால் பைகளுடன் ரயிலில் ஏறிய போது தவறி விழ இருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே தலைமை காவலர் பாலகிருஷ்ணன் அவரை தாங்கி பிடித்து , ரயில் பெட்டியில் பத்திரமாக அனுப்பி வைத்தார்.

இந்த காட்சிகள் ரயில் நிலைய சி.சி.டி.வி கேமராவில் பதிவானது. இதனையடுத்து கோவை ரயில் நிலைய இயக்குனர் , தலைமை காவலர் பாலகிருஷ்ணனின் துரிதமாக செயல்பட்டு , பெண்மணியை காப்பாற்றியதற்காக பாராட்டி சான்றிதழ் மற்றும் 500 ரூபாய் வெகுமதியை வழங்கினார். இதனையடுத்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் அவரை பாராட்டினர்.

மேலும் படிக்க