• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரமலான் மாத சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் – சுன்னத் ஜமாத் கூட்டமைப்பினர் மனு

April 26, 2021 தண்டோரா குழு

ரமலான் மாத சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து சுன்னத் ஜமாத் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் பொதுச்செயலாளர் இதாயத்துல்லாஹ் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளிவாசலுக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியுடன் நின்று தொழுகை நடத்துவது, பள்ளிவாசல்களுக்கு வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்வது என முழுமையான கட்டுப்பாடு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தங்கள் வழிபாடுகளை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாடு என கூறி இன்று முதல் வழிபாட்டிற்கான அனுமதியை முழுமையாக மறுத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக ரமலான் மாதம் என்பது முஸ்லிம்களுக்கு சிறப்புமிக்க மாதமாகும். எனவே முஸ்லிம்களின் உணர்வை கருத்தில் கொண்டு வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்ற இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இஸ்லாமியர்களுக்கு வழிபாட்டு தலங்களுக்கு சென்று தொழுகை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க