February 7, 2018
தண்டோரா குழு
டெல்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றோரிடம் டெல்லி போலீசார் ஒப்படைத்தனர்
திருப்பூர் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வமணி என்பவரது மகன் சரத்பிரபு.இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியின் கீழ் உள்ள யுசிஎம்ஸ் கல்லூரியில் எம்.டி மருத்துவ படிப்பினை படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த(ஜன 17)ம் தேதி காலையில் அவர் தனது விடுதி அறையில் பிணமாக இருந்துள்ளார்.இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த கல்லூரியினர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இத்தகவல் அறிந்த அங்கு சென்ற சரத்பிரபுவின் தந்தை அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதை தெரிவித்ததையடுத்து 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்து அவரது உடலை டெல்லி விமான நிலையத்திலிருந்து கோவை வழியாக திருப்பூர் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சரத்பிரபுவின் தந்தை சரத்பிரபுவின் உடலில் கழுத்து,தலை மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும்,இதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி முறையிட்டார்.இந்நிலையில் சரத்பிரபுவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றோரிடம் டெல்லி போலீசார் ஒப்படைத்தனர்.