May 26, 2018
தண்டோரா குழு
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில்,விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா தனக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் குறித்து பேசிய ஆடியோ பதிவை, மருத்துவர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார்.
அந்த ஆடியோவில், என்ன வேண்டும் என்று ஒருவர் கேட்க மூச்சுத் திணறலோடு ஜெயலலிதா இருமும் ஒலி கேட்கிறது. ரத்த அழுத்தம் 140/80 என அதிகமாக இருப்பதாக மருத்துவர் தெரிவிக்க, இது எனக்கு நார்மல் தான் என ஜெயலலிதா தெரிவிக்கிறார். ரத்தம் எடுக்க முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்கிறார் ஜெயலலிதா. அதைபோல் தியேட்டரில் ரசிகன் விசில் அடிப்பது போல் மூச்சுத் திணறலின்போது சத்தம் வருகிறது என்கிறார். ஜெயலலிதா அடிக்கடி இருமிக் கொண்டே பேசுவது ஆடியோவில் பதிவாகியுள்ளது.