February 23, 2018
தண்டோரா குழு
ரஜினி மக்கள் இயக்கம் 32 ஆண்டுகளாக கவனத்துடன் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களை இன்று சந்தித்தார்.
நெல்லை மாவட்ட ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,
“ரஜினி மக்கள் இயக்கம் 32 ஆண்டுகளாக கவனத்துடன் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது. இதனை மேலும் பலப்படுத்துவதே நோக்கம். பெரிய கட்சிகள் தோல்விகளை சந்தித்தாலும் அதன் கட்டமைப்பு தான் அந்த கட்சிகளை பாதுகாத்து வருகிறது.குடும்பத்துக்குள் ஒற்றுமை எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி கட்சிக்குள்ளும் இருக்க வேண்டும்.எனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் பாடம் கற்றுத்தர தேவையில்லை,அவர்கள் தான் மற்றவர்களுக்கு கற்றுத்தருவார்கள்.மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம்.ஒரு குடும்பம் நடத்தணும்னா குடும்பத்தலைவன் சரியாக இருக்கணும், இந்த குடும்பத்தை பொறுத்தவரை நான் சரியாக இருக்கிறேன்”. என்று கூறினார்.