March 12, 2018
தண்டோரா குழு
ரஜினி போராடவும் மாட்டார் அறிக்கை விடவும் மாட்டார் நேரடியாக முதல்வர் பதவிக்கு தான் ஆசைப்படுகிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பளார் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
குரங்கனி மலையேற்றத்திற்கு அனுமதி இல்லாமல் உள்ளே சென்றார்கள் என்றால் வனத்துறையில் சோதனை செய்ய ஆட்களே இல்லையா? அரசின் பதில் பொறுப்பற்றது.இயற்கையாக தீ பற்றினால் அணப்பதற்கான எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லையா?பேரிடர் ஏற்படும் போதெல்லாம் இதே போல் தான் நடவடிக்கைகள் உள்ளது.குரங்கனி தீ விபத்தை முன்னிறுத்தி காட்டு பகுதிக்குள் யாரையும் செல்ல விடாமல் தடுத்து நியூட்ரினோ பணிகளை ஆரம்பித்து விடுவார்கள் என்றார்.
மேலும், பலவிஷயங்களில் ரஜினி கருத்து கூற மறுப்பது குறித்து கேட்ட கேள்விக்கு,அவர் அப்படிதான் நழுவி போவார், போராடவும் வர மாட்டார் அறிக்கை விடவும் மாட்டார் நேரடியாக முதல்வர் பதவிக்கு தான் ஆசைப்படுகிறார் என்று சீமான் கூறினார்.