• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி தெரியாமல் பேசுகிறார் உண்மை தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பார் – உதயநிதி ஸ்டாலின்

January 21, 2020

ரஜினி தெரியாமல் பேசுகிறார். உண்மை தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் தான் நடத்திய ஊர்வலத்தில்ராமன் சீதை சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று செருப்பால் அடித்ததாக துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார். இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்ப்பு குரல் எழுந்தது. ஆனால் இவ்விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் இக்கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “ஏற்கெனவே காவிரி விவாகரம் தொடர்பாக பேசிவிட்டு, பின்பு உண்மை தெரிந்த பின்னர் மன்னிப்பு கேட்டார். அதேபோல் பெரியார் குறித்து பேசியதற்காகவும் உண்மை தெரிந்த பின்னர் மன்னிப்பு கேட்பார். ரஜினிகாந்த் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை” என்றார்.

மேலும் படிக்க