January 30, 2018
தண்டோரா குழு
ரஜினிகாந்த் காட்டுவது பாபா முத்திரையே இல்லை என்றும், அது பார்க்க ஆட்டுத் தலை போல் உள்ளதாகவும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பேருந்துக்கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என கூறிவிட்டு அமெரிக்க சென்றவர் ரஜினி.காவிரி நதி நீர் பிரச்சினையில் ரஜினி யாருக்கு ஆதரவாக குரல் கொடுக்கப் போகிறார் என்று கேள்வி எழுப்பினார். மேலும், ரஜினி ஆட்டுத் தலை போன்று கையைக் காட்டுவதாகவும் அது பாபா முத்திரையே அல்ல என்றும் சரத்குமார் தெரிவித்தார்.
முன்னதாக பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் சரத்குமார் சைக்கிள் ஓட்டிச்சென்றார்.பேருந்து கட்டண உயர்வை கண்டிக்கும் விதமாக போராட்ட மேடைக்கு சைக்கிளில் சரத்குமார் சென்றார்.