• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி, கமல் அரசியல் வருகை தருவதை பொதுமக்களின் ஒருவனாக இருந்து பார்ப்பேன் – நடிகர் விவேக்

December 10, 2020 தண்டோரா குழு

ரஜினி, கமல் அரசியல் வருகை தருவதை பொதுமக்களின் ஒருவனாக இருந்து பார்ப்பேன்‌ என நடிகர் விவேக் கூறியுள்ளார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக கோவை பச்சாபாளையம் பகுதியில் சிறுதுளி அமைப்பு மற்றும் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி சார்பில் 74 மரங்கள் நடவு செய்யும் இசை வனம் அமைக்கும் பணி இன்று துவங்கியது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விவேக் இசை வனத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து பணிகளை துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுடம் பேசிய அவர்,

மரக்கன்றுகளை நடவு செய்தவர்கள் மட்டுமல்ல அனைவரும் மரங்களை பராமரிக்க வேண்டும். நடிகர், நடிகைகள் மட்டுமல்ல யாருமே தற்கொலை செய்ய கூடாது. தற்கொலை கோழைகள் எடுக்கும் முடிவு.மக்களில் 90% பேருக்கு எப்போதாவது இந்த தற்கொலை என்னும் தொன்றியிருக்கும் ஆனால் அதை நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.ஓ.டி.டி தளங்கள் திடீர் மழை போல், வீட்டில் எப்போதும் படங்களை பார்க்க மாட்டார்கள், மக்கள் திரையரங்கு செல்வதை தான் விரும்பவார்கள்.

ரஜினி, கமல் அரசியல் வருகை தருவதை பொதுமக்களின் ஒருவனாக இருந்து பார்ப்பேன். மக்கள் விரும்புவர்களுக்கே ஆதரவு
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவாக முதல் முறையாக கோவையில் இசை வனம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் இசை கருவிகள் தயாரிக்க பயன்படுத்தும் மரங்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அவர் உடல் மறைந்தாலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்

இவ்வாறு பேசியுள்ளார்.

மேலும் படிக்க