• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினி அரசியலுக்கு வருவோம் என்று சொன்னால் மட்டும் போதாது – அன்புமணி ராமதாஸ்

December 29, 2018 தண்டோரா குழு

சென்னை மற்றும் சாத்தூரைச் சேர்ந்த இரு பெண்மணிகளுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவாகரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறித்தியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு தலைமை செயற்குழு கூட்டம் கோவை வரதராஜபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பாமகவின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கபட உள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டத்திற்க்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ்.

கோவையில் நடக்கும் பாமகவின் செயற்குழு ,பொதுக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில முக்கிய பிரச்சனைகள் குறித்து தீர்மானமாக நிறைவேற்றப்பட உள்ளது. சென்னை மற்றும் சாத்தூரைச் சேர்ந்த இரு பெண்மணிகளுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவாகரத்தில் தமிழகத்தில் சுகாதாரத்துறை சரியாக செயல்படவில்லை என்பதைக் காட்டுகிறது.எனவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். ஒரு மருத்துவராக தான் கூற விரும்புவது எச் ஐ வி ரத்தம் வழங்கியது மிக பெரிய தவறு அதனை ஏற்க முடியாது. என்.எல்.சி விரிவாக்கத்திற்க்கு தடை செய்ய வேண்டும். அந்த பகுதி பாலைவனமாக்க விடக்கூடாது. உயர்மின் கோபுரம் விவகாரத்தில் விவசாயிகளை அரசு ஏளனமாக பார்ப்பதாகவும் குறைந்தபட்சம் பேச்சுவார்த்தையாவது நடத்த வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை சட்டத்தை மதிக்காமல் செயல்படுகிறது. தமிழக அரசு அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. ஸ்டெர்லைட் விவாகரத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து உச்சநீதிமன்றத்தில் வாதிட வேண்டும். டாஸ்மாக் பிரச்சினைக்கு மூத்த வழக்கறிஞர்களை கொண்டு உச்சநீதிமன்றத்த வாதிட்ட தமிழக அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அப்படி வாதிடவில்லை என குற்றம் சாட்டினார். ஜனவரியில் சட்டமன்ற கூட இருப்பதால் காவிரி டெல்டாவைக் பாதுகாக்க ஒரு சட்டம் இயற்றி குடியரசு தலைவரிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் எனவும் கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயகளுக்கு இன்னும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வருவது தேவையில்லாதது எனவும் அதனால் நமக்கு பாதகங்கள் தான் அதிகம் என கூறினார்.

ரஜினி காந்த் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ் அரசியலுக்கு வருவோம் என்று சொன்னால் மட்டும் போதாது, வந்தால் பார்போம், வரட்டும் அவர்களுக்கு பதில் சொல்லாலாம் என கூறினார்.

மேலும் படிக்க