• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்- சரத்குமார்

May 31, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த சம்பவத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம் எனக் கூறினார்.

தூத்துக்குடி சம்பவம் குறித்து சமூக விரோதிகளால் தான் போராட்டம் கலவரமானது என ரஜினிகாந்த் பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சில அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில்,சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத்குமார்,

மனிதனுக்கு போராட உரிமை இல்லையா? ரஜினி ஏதோ சமூக விரோதிகள் புகுந்தனர் என்று சொல்கின்றாரே.சமூக விரோதிகள் லிஸ்ட் இருந்தால் விசாரணை கமிஷனிடம் ரஜினி அதை கொடுக்க வேண்டும்.இல்லையெனில் இப்படி பேசியதற்காக ரஜினியை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க