December 23, 2020
தண்டோரா குழு
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ ஆகியோர் நடித்து வருகின்றனர்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.
ஏற்கனவே 60 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து,கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கியது.
இந்நிலையில், படப்பிடிப்பில் இருந்த 8 பேருக்கு கொரொனா உறுதியானதையடுத்து ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படப்பிடித்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பட வேலைகள் முடிந்த பிறகு தான் கட்சி வேலைகளை ரஜினி தொடங்குவார் என சொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.