March 14, 2018
தண்டோரா குழு
ரஜினிகாந்த்,கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்று நடிகர் இமான் அண்ணாச்சி தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று தனியார் கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்த இமான் அண்ணாச்சி அவரது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ரஜினிகாந்த்,கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பேச்சுகள் அனைத்தும் காமெடியாக உள்ளது என்றார்.மேலும்,தற்போது அரசியல் சூழ்நிலை மோசமாக இருப்பதாகவும் இதில் கருத்துகள் சொல்ல இடமில்லை என்றும்,தற்போது திரைக்கு வந்த படங்கள் அனைத்தும் மக்களை மாற்று வழியில் கொண்டு செல்ல தூண்டுவதனால் அம்மாதிரியான படங்களை இயக்குனர்கள் தடை செய்ய வேண்டுமெனவும் கூறினார்.