January 4, 2021
தண்டோரா குழு
கோவையில் வெளியாகி உள்ள ஊராட்சி ஒன்றியம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதாக திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கோவையில் தெரிவித்துள்ளனர்
கொரோனா கால ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக புதிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தமிழக அரசு வெளியிட்ட சில விதிமுறைகளின்படி புதிய படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் கோவையைச் சேர்ந்த தயாரிப்பாளரான தண்டபாணி தயாரித்துள்ள ஊராட்சி ஒன்றியம் எனும் திரைப்படம் கோவையில் வெளியாகியது.திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை கோவையைச் சேர்ந்த தண்டபாணி தயாரித்து படத்தில் வில்லனாகவும் நடித்து உள்ளார்.
இந்நிலையில் கோவை கே.ஜி.திரையரங்கில் கடந்த புத்தாண்டு தினத்தன்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி ஓடி கொண்டிருக்கும் கே.ஜி.பிக் சினிமாஸிற்கு படத்தின் தயாரிப்பாளர் தண்டபாணி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நடிகர்கள் மின்சார மோகன் ஆகியோர் திரையரங்கிற்கு வந்திருந்தனர்.
செய்தியாளரிடம் கூட்டாக பேசுகையில் ,
திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் புதுமுகங்களுடன் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது குறிப்பாக திண்டுக்கல்லில் ஷூட்டிங்கின்போது ஜெயபால் மிகுந்த உதவி செய்ததாகவும் படத்திற்கு எஸ்.ஆர். பிரசாத்தின் இசையும் சுரேஷ் சுப்பிரமணியனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.