• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

யெஸ் பேங்க், உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்காக, ஃப்ளோட்டிங் ரேட் ஃபிக்ஸட் டெபாசிட் அறிமுகம்

June 23, 2022 தண்டோரா குழு

யெஸ் வங்கி, இன்று அனைத்து உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கும், புதிய தயாரிப்பு வழங்கலான, மாறும் விகித நிலையான வைப்புத்தொகையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.

இந்த நிலையான வைப்புத்தொகையின் வட்டி விகிதம், நடைமுறையில் உள்ள ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்படும், இது வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் நிலையான வைப்புகளில் ஊக்கமிக்க வருமானத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது.

ஃப்ளோட்டிங் ரேட் ஃபிக்ஸட் டெபாசிட் என்பது, மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட ரெப்போ விகிதங்களுடன் இணைக்கப்பட்ட ஊக்கமிக்க வரவுகளுடன், நிலையான வைப்புத்தொகையின் பாதுகாப்பை வழங்கும் சொத்து வகுப்பை செயல்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான வழங்கலாகும். வாடிக்கையாளரின் விருப்பத்தின்படி, இந்த மாறும் விகித நிலையான வைப்பு 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்குப் பெறலாம்.

அறிமுகம் குறித்து யெஸ் வங்கியின் எம்டி மற்றும் சிஇஓ பிரசாந்த் குமார் கூறுகையில்,

“யெஸ் பேங்கில், எங்கள் வங்கி முயற்சிகளின் மையமாக, புதுமை மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பிரிவுகளில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, வகையில் சிறந்த பலன்கள் மற்றும் அனுபவத்தை வழங்க, நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். ஃப்ளோட்டிங் ரேட் ஃபிக்ஸட் டெபாசிட் என்பது ஒரு தனித்தன்மைவாய்ந்த நிலையான வைப்பு தயாரிப்பு ஆகும், இது, இத்தகைய தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மற்றொரு ஆதாரமாகும்.

இந்தத் தயாரிப்பின் முக்கிய நன்மைகளில் ஒன்று, வட்டி விகிதத்தில் திருத்தம் தானாகவே நிகழும் மற்றும் வங்கி அல்லது வாடிக்கையாளர்களின் கைமுறையான தலையீடு தேவையில்லை. இந்த மாறும் விகித நிலையான வைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்குப் பின்னால் கவனமாக ஆலோசிக்கப்பட்டு, சிந்திக்கப்பட்டு வருகிறது, மேலும் இது, எங்களின் சில்லறை தயாரிப்பு வழங்கலை மேலும் மேம்படுத்துவதற்கான மற்றொரு படியாகும் எனக்கூறியுள்ளார்.

மேலும் படிக்க