May 25, 2021
தண்டோரா குழு
யாஸ் புயல் காரணமாக கோவை வழித்தடத்தில் இயங்கும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
யாஸ் புயல் பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு கோவை,ஈரோடு, சேலம் வழித்தடங்களில் இயக்கப்படும் ஷாலிமர்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் 26-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர சிறப்பு ரயில் நாளை ,பாட்னா-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 28-ம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.
திருவனந்தபுரம் -அசாம் மாநிலம் சில்சார் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நாளையும், சில்சார்- திருவனந்தபுரம் வாராந்திரச் சிறப்பு ரயில் வரும் 27-ம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.இதுதவிர ஷாலிமர்- திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரயில் நாளையும்,திருவனந்தபுரம்-ஷாலிமர் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 27-ம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன. எர்ணாகுளம்-ஹவுரா வாராந்திர சிறப்பு ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.