• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ம.நீ.ம கோவை, திருப்பூர் மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக அனுஷா ரவி நியமனம் !

December 7, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநில தேர்தல் தலைமை குழு மற்றும் ஒவ்வொரு பாராளுமன்றத்திற்குட்பட்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ள அறிக்கையில்,

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. இந்த சமயத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்பொருட்டு, துணைத் தலைவர் ஏ.ஜி.மெளரியா தலைமையில் மாநில தேர்தல் தலைமை பணிக் குழு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழுவை அறிவிக்கிறேன் என கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் விவரம்:

ஏ.ஜி.மெளரியா – துணைத் தலைவர் (கட்டமைப்பு).ஆர்.தங்கவேலு – துணைத் தலைவர் (களப்பணி மற்றும் செயல்படுத்துதல்). பிரியா சேதுபதி – நிர்வாகக் குழு உறுப்பினர். சிவ.இளங்கோ – மாநிலச் செயலாளர் (கட்டமைப்பு). செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர் (ஊடகம், தகவல் தொடர்பு). சரத்பாபு ஏழுமலை – மாநிலச் செயலாளர் (தலைமையகம்).
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த 6 பேர் குழு மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தலைமை தேர்தல் பணிக்குழுவாக செயல்படும். இது தவிர ஒவ்வொரு பாராளுமன்றத்திற்குட்பட்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கோவை,திருப்பூர்
மாவட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை நிலைய பரப்புரையாளர் அனுஷா ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

பார்க் கல்வி குழுமங்களின் செயல் அதிகாரியான அனுஷா ரவி தொழில் துறையிலும் கல்வி முனைவிலும் நெடிய அனுபவம் கொண்டவர். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தொகுதியிலும் போட்டியிட்டார். ம.நீ.ம கட்சிக்கு கோவையில் பலம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய விருப்பமுள்ளவர்கள் http://www.maiam.com/application-form.php என்ற இணையத்தின் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க