March 4, 2021
தண்டோரா குழு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலையப் பரப்புரையாளராக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அனுஷா ரவியை நியமித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேக ஆகியவை மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தங்கள் கூட்டணியை அறிவித்துள்ளன.
இந்நிலையில்,மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலையப் பரப்புரையாளராக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அனுஷா ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையப் பரப்புரையாளராக மாநில செயலாளர் டாக்டர் அனுஷா ரவியை நியமனம் செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.