பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும்
மோடி கபடி லீக் செப்.17ம் தேதி தொடங்கவுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டு பிரிவின் மாநில துணைத் தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மோடி கபடி லீக் போட்டிகள்,கபடி கழகத்தோடு இணைந்து வருகிற செப்.17,18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.கோவை மாவட்டத்தில் வடவள்ளி உள்ள பல இடங்களில் கபடி லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய் ஒரு லட்சமும், 2ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம், 4-ம் இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
தமிழக முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.இதில் வெற்றி பெறும் அணிகளுக்கான இறுதிப்போட்டி மதுரையில் வரும் செப் 27, 28,29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும்.இறுதி போட்டியில் மத்திய அமைச்சர்கள்,மாநிலத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள். இதில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 லட்சமும் வழங்கப்படுகிறது என்றார்.
பேட்டியின் போது இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்ட தலைவர் நவீன் குமார்,மாவட்ட துணை தலைவர் பிரனேஷ், மாவட்ட செயலாளர்கள் ராம்போ கோகுல், கிஷோர்,குமார், வெங்கட் சுப்பு, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் சவுமியா ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு