February 17, 2018
தண்டோரா குழு
“மோடி அவர்களின் கூற்று பெருமிதம் தருகிறதுமகிழ்ச்சி என கவிஞர் வைரமுத்து டுவீட் செய்துள்ளார்.
டெல்லியில் டால்கோட்ரா விளையாட்டு அரங்கத்தில் மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த தேர்வுகள் தொடர்பான விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசிகையில் சமஸ்கிருதத்தை விட அழகான தமிழ் மொழி தனக்கு தெரியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என கூறியிருந்தார்.
இந்நிலையில், அதற்கு கவிஞர் வைரமுத்து மோடி பெயரை குறிப்பிட்டு டுவீட் செய்துள்ளார். அதில், தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிடத் தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடிஅவர்களின் கூற்று பெருமிதம் தருகிறது; மகிழ்ச்சி.மூத்த மொழிக்கான முன்னுரிமையும் பெருமையும் தமிழுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறேன். அதற்கான அறிகுறியென்றே இதை அறிகின்றேன் எனக் குறிபிட்டுள்ளார்.