• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மோடி அரசை கண்டித்து சிபிஎம், சிபிஐ ஆவேச மறியல் – கொடும்பாவி எரிப்பு – கைது

December 9, 2020 தண்டோரா குழு

கோவையில் மோடியின் கொடும்பாவி எரித்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் இடதுசாரி கட்சியினர் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய பாஜக அரசின் வேளாண் விரோத சட்ட திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 14 நாட்களாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டத்தை இடதுசாரி கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதன்ஒருபகுதியாக கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக நாள்தோறும் சிபிஎம், சிபிஐ கட்சியின் சார்பில் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்தொடர்ச்சியாக புதனன்று கோவை சூலூர் தாலுகாவிற்குட்பட்ட சுல்தான்பேட்டை, பாப்பம்பட்டி பிரிவு, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கோவை சுல்தான்பேட்டை பல்லடம் சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், சூலூர் தாலுகா செயலாளர் எம்.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சு.பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வி.ஆர்.பழனிச்சாமி, திருமலை சாமி, விதொச செயலாளர் ஆர்.செல்வராஜ் மற்றும் ரவீந்திரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட முன்னூறுக்குக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக போராட்டத்தை வாழ்த்தி திமுக, காங்கிரஸ், கொமதேக தலைவர்கள் உரையாற்றினர்.இதேபோன்று சூலூர் தாலுகா பாப்பம்பட்டி பிரிவில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் தாலுகா செயலாளர் வசந்தகுமார், ஆகியோர் தலைமை தாங்கினர். வேளான் சட்டத்தை திரும்பபெற வேண்டும், கார்ப்ரேட்டுகளுக்கு காவடி தூக்குவதை மோடி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்திய நாட்டு விவசாயிகளை பாதுகாப்போம் என்கிற ஆவேச முழக்கத்துடன் மோடியின் கொடும்பாவியை எரித்தனர்.இதனால் காவல்துறையினருக்கும் பேராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா உறுப்பினர் ஸ்டாலின்குமார், ஜோதிபாசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பி.எஸ்.ராமசாமி, பேரின்பம் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மேட்டுபாளையத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பாலமூர்த்தி மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.கேசவமணி, பெருமாள், ராஜலட்சுமி, மேட்டுபாளையம் தாலுகா செயலாளர் சிராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் சிவசாமி, பழனிச்சாமி, துரைசாமி உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் மோடி அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி மேட்டுப்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

மேலும் படிக்க