• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடி அரசின் விளம்பரச் செலவு 4 ஆண்டுகளில் ரூ.4,300 கோடி: ஆர்டிஐயில் தகவல்

May 14, 2018 தண்டோரா குழு

கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்துக்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு ஊடகங்கள் மூலம் ரூ.4 ஆயிரத்து 343.26 கோடி செலவு செய்துள்ளது என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் அணில் கல்காலி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்று 4 ஆண்டுகளில் விளம்பரத்துக்காக எத்தனை கோடி பணம் செலவு செய்துள்ளது என மனுத்தாக்கல் செய்து இருந்தார்அந்த மனுவுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மத்திய அரசு நாளேடுகளில் விளம்பரத்துக்காக ரூ.424.85 கோடியும், தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட மின்னணு விளம்பரங்களுக்காக ரூ.448.97 கோடியும், விளம்பரப் பலகைகள், பதாகைகள் உள்ளிட்ட வெளிப்புற விளம்பரத்துக்காக ரூ.953.54 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

2015-16-ம் ஆண்டு நிதி ஆண்டில் செலவு முந்தைய ஆண்டைக்காட்டிலும் அதிகரித்தது. நாளேடுகளில் விளம்பரம் செய்ய ரூ.510.69 கோடியும், மின்னணு ஊடகங்களில் விளம்பரம் செய்ய ரூ.541.99 கோடியும், வெளிப்புற விளம்பரங்களுக்காக ரூ.118.43 கோடியும் என மொத்தம் ரூ.ஆயிரத்து171.11 கோடி செலவிடப்பட்டது.

2016-17ம் ஆண்டில் நாளேடு விளம்பரங்களுக்கு ரூ.463.38 கோடியும், மின்னணு விளம்பரங்களுக்காக ரூ.613.78 கோடியும், வெளிப்புற ஊடகங்களுக்காக ரூ.185.99 கோடியும் என மொத்தம் ரூ.1,263.15கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் மாதம் வரை, மின்னணு ஊடங்களுக்கு ரூ.475.13 கோடியும், வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ.147.10 கோடியும் செலவிடப்பட்டது.2017 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் நாளேடுகளில் விளம்பரத்துக்கு ரூ.333.23 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.955.46கோடி செலவு செய்துள்ளது என தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க