• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடியை தொடர்ந்து மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் ரஜினி !

January 28, 2020

பிரதமர் மோடியை தொடர்ந்து பேர் கிரில்ஸின் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்கிறார்.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றான மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸுடன் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்க அதிபராக பதவிவகித்தபோது ஒபாமா கலந்துகொண்டிருந்தார். அதேபோல இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தார்.

இந்நிலையில்,பிரதமர் மோடியை தொடர்ந்து பேர் கிரில்ஸின் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்கிறார். கர்நாடகாவின் பந்திப்பூர் சரணாலயத்தில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஷூட்டிங் முடிந்த பிறகு இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நரேந்திர மோடியை அடுத்து இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கொண்டுள்ளார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க