• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடிக்கு மின்னஞ்சல் அனுப்பிய வைகோ

March 6, 2017 தண்டோரா குழு

இலங்கையில் நடைபெற்ற ஈழுத்தமிழர் இனப்படுகொலை குறித்து பொதுவான பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்ட சுதந்திரமான விசாரணைதான் தேவை” என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு வைகோ மெயில் அனுப்பியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசியதாவது:

“இலங்கையில் தமிழர் பகுதிகளில் காணாமல் போன ஒரு லட்சம் பேர் பற்றி எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. இலங்கைத் தீவில் நடைபெற்ற மிக கோரமான ஈழத்தமிழர் இனப்படுகொலைக்குக் கூட்டு குற்றவாளி காங்கிரஸ் தலைமையேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான்.

இந்தக் குற்றச்சாட்டிலிருந்து காங்கிரசும், அந்த அரசில் பங்கேற்ற அரசியல் கட்சிகளும் தப்ப முடியாது. வெளியுறவுக் கொள்கையில் சிங்கள அரசுக்கு ஆதரவாக முந்தைய காங்கிரஸ் அரசின் அதிகாரிகள் எப்படி செயல்பட்டார்களோ அதையே பிரதமர் மோடி தலைமையிலான அரசும் பின்பற்றுவது வேதனையளிக்கிறது.

கடந்த அரசு எடுத்த அதே நிலைபாட்டை தற்போதைய மத்திய அரசும் எடுக்கக் கூடாது என்றும் இலங்கையில் நடைபெற்ற ஈழுத்தமிழர் இனப்படுகொலை குறித்து பொதுவான பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்ட சுதந்திரமான விசாரணைதான் தேவை என்பதை வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்”.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

மேலும் படிக்க