• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மொராக்கோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் வால் ஏலம்

January 17, 2018 தண்டோரா குழு

மொராக்கோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் வால், மெக்ஸிகோ நாட்டில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஏலம் விடப்பட்டது.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனாசர் இனம் காலநிலை மாற்றம், இயற்கை அழிவுகளினால் முற்றிலும் அழிந்து போய்விட்டது. காலப்போக்கில் அந்த விலங்குகள்உடல்கள் அல்லது உடலின் பாகங்கள் பூமியின் கீழ் உள்ள கற்களில் ஆழமாக பதிந்து விடுகின்றன. பூமியின் கீழ் ஆய்வு செய்யும்போது, இந்த அந்த படிவங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், வட ஆப்பிரிக்காவில் அட்லான்டிக் கடலையும் மத்திய தரைக்கடலையும் எல்லையாக கொண்டுள்ள நாடு மொராக்கோ ஆகும். அந்த நாட்டில் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்த போது, டைனோசரின் வால் ஒன்றை கண்டுபிடித்தனர். இதற்கிடையில், மெக்ஸிகோ நாட்டில் செவ்வாய்கிழமை (ஜனவரி 16) இரவு நடந்த ஏலத்தில், அந்த வால்ஏலம் விடப்பட்டது. சுமார் 4 மீட்டர் நீளம், 180 கிலோ எடையுடைய வால்1.8 மில்லியன் மெக்ஸிக்கோ பெசோஸ் (அதாவது 95,805 டாலர்)ருக்கு விலைபோனது.

இந்த தொகை கடந்த செப்டம்பர் மாதம், லத்தீன் அமெரிக்க நாட்டை தாக்கிய இரண்டு பூகம்பத்தால் பலத்த சேதமடைந்த 5,000 பள்ளிகளை மறுசீரமைப்பதற்கு, BBVABancomer Foundationனுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என என்று அந்த ஏல நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

மேலும், பெயர் வெளியிட விரும்பாத ஒரு மெக்ஸிகன் தொழிலதிபர், தனது சேகரிப்பிற்காக அந்த Fossilஐ வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க