May 3, 2018
தண்டோரா குழு
சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் தோனி விளையாட்டு மைதான தொழிலாளர்களுடன் சேர்ந்து மே தினத்தை கொண்டாடினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வருடம் இடைவேளைக்கு பிறகு இந்த ஆண்டு ஐபிலில்
களமிறங்கியுள்ளது.இந்த ஐபிலில் சென்னை அணியின் கேப்டன் தோனி தனது அதிரடி ஆட்டத்தினால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில்,கடந்த மே 1ம் தேதி தொழிலர் தினம் கொண்டாடப்பட்டது.அன்றய தினம் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் தோனி சேப்பாக்கம் மற்றும் புனே விளையாட்டு மைதான தொழிலாளர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.இந்த கொண்டாடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.அந்த பக்கத்தில் தோனி ரசிகர்கள் “ரியல் மனிதர் சூப்பர் ஹீரோ” என பாராட்டி வருகின்றனர்.