மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு மே.6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ்-ல் சேரமுடியும்.கடந்த 2016 ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படியில் எம்பிபிஎஸ் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2016 ம் ஆண்டு தமிழகத்துக்கு மட்டும் நீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
2017 முதல் தமிழகத்தில் நீட் தேர்வுப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வினால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு மே.6ஆம் தேதி நடைபெறும் என தற்போது அதிகார்பபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மே 6-ந்தேதி இன்று முதல் மார்ச் 9ம் தேதி வரை ஆன்லைனில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இஅறிவித்துள்ளது. அதைபோல், பொதுபிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினருக்கு 1400 ரூபாயும், எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 750 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக பெறப்படவுள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்