April 20, 2020
தண்டோரா குழு
மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு தளர்த்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஏப்ரல் 20- க்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் அறிக்கையினை செயல்படுத்துவது குறித்தும் இன்று முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற மே 3ம் தேதி வரை ஊரடங்கில் எந்த தளர்வும் கிடையாது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்குகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும்
நோய்த்தொற்று குறைந்தால், வல்லுனர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.