• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மே 18 ஆம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும்!- தமிழக அரசு

May 15, 2020 தண்டோரா குழு

மே 18 ஆம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வரும் திங்கள் கிழமை ( மே 18) முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வாரத்தின் ஆறு நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

• மே 18-ந்தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும்

• வாரத்தின் ஆறு நாட்களும் அரசு அலுவலகங்கள் செயல்படும்.

• ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.

• அலுவலக பணிக்கு வராத பணியாளர்கள் மின்னணு முறையில் அலுவலகத்துடன் இணைந்திருக்க வேண்டும்.

• அரசு ஊழியர்கள் பணிக்கு வர ஏதுவாக பேருந்து வசதி செய்து தரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க