• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மே. வங்கத்தில் எச்சில் துப்பினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் ! முதல்வர் மம்தா பாணர்ஜி அதிரடி

November 24, 2018 தண்டோரா குழு

மேற்கு வங்கத்தில் எச்சில் துப்பினால் ஒரு லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பாணர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள தக்ஷ்ணே்ஷ்வர் காளி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு வசதியாக நடைமேம்பாலம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி தக்ஷ்ணேஷ்வர் கோவில் மேம்பாலம் வழியாக சென்றுள்ளார். அப்போது மேம்பாலத்தின் வழியேங்கும் வெத்தலை, பான்பராக்கு, குட்கா எச்சில் என மக்கள் அசுத்தம் செய்துள்ளனர்.பாலம் திறந்து கொஞ்ச நாட்களில் இவ்வளவு அசுத்தமாகக்கி விட்டார்களே என்று மம்தா மனம் நொந்து போனார். இது மட்டும் இன்றி நகரின் பல்வேறு இடங்களிலும் பலர் அசுத்தம் செய்வது அவரது கவனத்துக்குச் சென்றுள்ளது.

ஆனால் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே பொதுஇடத்தில் அசுத்தம் செய்பவர்களை தண்டிக்கும் விதமாக 50 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் சட்டம் இருகின்றது.இந்நிலையில் மக்கள் அதை பொருட்படுத்தாமல் அசுத்தும் செய்து வந்துள்ளனர். இதற்கு தீர்வாக இந்த சட்டத்தை திருத்தியமைத்து அபராதத் தொகையை உயர்த்த மம்தா முடிவு செய்தார்.

இதனையடுத்து இனி பொது இடத்தில் யாரேனும் எச்சில் துப்பினால் 5,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.இதனை தொடர்ந்து கடந்த வியாழனன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களை கண்காணிக்கும் வகையில் 11 உறுப்பினர்கள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க