June 6, 2018
தண்டோரா குழு
பழனியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க முயற்சி செய்த போது கத்தியால் தாக்கப்பட்ட கோவை பேரூர் உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மதுக்கரை கே.ஜி.காலனி பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான விக்னேஷ் மற்றும் ஆசிக் அகமது ஆகிய இருவரும் பழனி அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது.இதனையடுத்து பேரூர் காவல்நிலைய ஆய்வாளர் தங்கபாண்டி தலைமையில் காவலர்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர்.அப்போது குற்றவாளிகள் தப்பிக்க முயற்சி செய்த போது கையில் இருந்த கத்தியால் காவலர்களை தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலில் பேரூர் உதவி காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினாருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனையடுத்து பழனியில் முதலுதவி சிகிச்சை முடிந்த பின்னர்,கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.