• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேலாடை இல்லாமல் சிறுமிகளை 15 நாட்கள் கோவிலில் தங்க வைக்கும் வினோத வழிபாடு

September 25, 2017 தண்டோரா குழு

மதுரை மாவட்டத்தில் பருவமடைய இருக்கும் 1௦ முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளை 15 நாட்கள் கோவிலில் தங்க வைக்கும் வினோத பழக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் கிராமத்தில், கிராமத்திற்கு நீண்ட ஆயுள், செழிப்பு ஆகியவற்றை கொண்டு வரும் என்ற நம்பிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் பருவம் அடையும் வயதிலிருக்கும் 7 இளம் சிறுமிகளை, அந்த கிராமத்தின் தெய்வமாக கருதப்படும் ‘எல்லை காத்த அம்மனுக்கு’ வழங்கப்படும் வினோத பழக்கம் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், தமிழ் ஆவணி மாதத்தின் கடைசி செவ்வாய்கிழமை அன்று, வெள்ளலூர் கிராமத்தை சுற்றியிருக்கும் 62 கிராமங்களில் இருந்து 1௦ முதல் 14 வயதுடைய சிறுமிகளை மேலாடை இல்லாமல் பட்டுபாவாடை உடுத்தி, நகைகளால் அலங்கரிக்கப்பட்டு, அந்த தெய்வத்தின் கோவிலுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

அங்கு வரும் சிறுமிகளில் 7 பேரை அந்த கோவிலின் பூசாரி தேர்ந்தெடுத்து, அவர்களை சுமார் 15 நாட்கள் அங்கேயே தங்க வைக்கப்படுகின்றனர். இந்த வினோத சடங்கிற்காக, பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் 15 நாட்கள் பள்ளியிலிருந்து விடுப்பு எடுக்கும் நிலை ஏற்படுகிறது.

கடைசி நாளின்போது, அந்த சிறுமிகள் பக்கத்து கிராமத்தில் இருக்கும் கோவிலுக்கும் அரிசியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பானமான ‘மாது குடம்’ எடுத்து செல்வதை பார்க்க, நூற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர்.

இதுக் குறித்து அந்த கோவில் பூசாரி எம்.கே.சின்னதம்பி கூறுகையில்,“அம்மனின் அருளால், எந்த ஒரு பாரபட்சம் இல்லாமல், 7 சிறுமிகளை தேர்ந்தெடுப்பேன். அந்த 7 பேரையும் நான் 15 நாட்கள் நல்ல முறையில் கவனித்துகொள்வேன்” என்றார்.

“அந்த சிறுமிகள் குடும்பத்தினரின் ஆண்கள், அவர்களுக்கு பாதுகாப்பாக கோவில் வளாகத்தில் தங்குவர். சிறுமிகள் அவர்களை காலையில் வந்து பார்பார்கள் ” என்று அந்த கிராமத்தின் முதியவர் ஒருவர் தெரிவித்தார்.

“மதுரைக்கு அருகிலிருக்கும் உறங்காபட்டி என்னும் இடத்திலிருக்கும் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறேன். நான் விடுப்பு எடுத்து உள்ளேன்” என்று ஒரு சிறுமி கூறினாள். “என் பள்ளியில் பரீட்சை நடந்துக்கொண்டு இருக்கிறது. மீண்டும் பள்ளிக்கு செல்லும்போது, மருத்துவ சான்றிதழ் வாங்கி செல்வேன்” என்று மற்றொரு சிறுமி கூறினாள்.

இந்த சடங்கிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 சிறுமிகளில் 3 சிறுமிகள் 8-ம் வகுப்பும், 2 பேர் 7-ம் வகுப்பும் மற்ற 2 பேர் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

“இந்த பழக்கம் பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பருவம் அடைந்த பெண்கள் இதில் கலந்துக்கொள்ள முடியாது. அம்மனுக்கு இந்த பழக்கத்தை தவறாமல் செய்து வருவதால், தலைமுறை தலைமுறையாக எங்கள் பகுதி மக்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து வருகிறது ” என்று அந்த கிராமத்தின் முதியவர் ஒருவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் 7 சமூகங்களை சார்ந்த 7 சிறுமிகள் இந்த சடங்கிற்காக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். “மற்றவர்கள் பார்வையில் இருந்து தவிர்க்க சில சிறுமிகள் தங்கள் உடலின் மார்பு பகுதிகளை தங்கள் நீண்ட கூந்தலை கொண்டு, மூடி கொள்வதும் உண்டு. இந்த சடங்கிற்காக தேர்ந்தெடுக்கப்படும் சில சிறுமிகள், தங்களை வீட்டிலிருந்து வேறு இடத்திற்கு அழைத்து செல்லும்போது அதிகமாக அழுவதும் உண்டு” என்று அந்த கிராமத்தின் பெண்கள் தெரிவித்தனர்.

இந்த சடங்கிற்காக அழைத்து செல்லப்படும் சிறுமிகளின் விருப்பத்தை யாரும் கேட்பதில்லை.அவர்களுடைய பெற்றோரும் கிராமத்தின் பெரியவர்கள் சொல்வதை கேட்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.

இதுக்குறித்து ஒரு சிறுமியின் தாயிடம், பருவம் அடையும் அறிகுறிகளுடன் இருக்கும் பெண்ணை வீட்டில் வைத்திராமல், மேலாடை இல்லாமல் வேறு இடத்தில் தங்க வைப்பது குறித்து கேட்ட போது, “இப்போது அவள் ஒரு தெய்வம். நீங்கள் எப்படி இப்படி கேட்க முடியும்?இதை செய்வதினால் நாங்கள் பாக்கியம் அடைகிறோம்” என்று கோவமாக பதிலளித்தார்.

மேலும் படிக்க