March 31, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தலுக்கு 6 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அதிரடியாக ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி வருகிறது.
இந்நிலையில்,மேற்கு மண்டல காவல் துறை தலைவர் தினகரன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜியாக அமல்ராஜ், கோவை எஸ்.பி.யாக செல்வ நாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய மண்டல ஐ.ஜி.யாக தீபக் எம்.தமூர், திருச்சி மாநகர காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளனர்.