• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுரண்டப்படும் செம்மண் மூலம் விவசாய உற்பத்தி பாதிப்பு

May 31, 2022 தண்டோரா குழு

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பேசினார்கள்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி பேசியதாவது:

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் அலுவலகத்தை சென்னைக்கு மாறுதல் செய்யாமல் தொடர்ந்து கோவையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேட்டுப்பாளையம், காரமடை, தோலம்பாளையம், தேக்கம்பட்டி, மருதூர், சீலியூர், வெள்ளியங்காடு, செம்மாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடத்தப்பட்டு வரும் கனிம வளங்கள் தொடர்பாக மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுரண்டப்படும் செம்மண் மூலம் விவசாய உற்பத்தி பாதித்துள்ளது. எனவே இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் தோட்டங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் நீர், மண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் விவசாய உற்பத்தியை பெருக்க மண்வளத்திற்கு ஏற்றவாரும், நீரின் தன்மை குறித்தும் தக்க வழிமுறைகள் அதிகாரிகள் வழங்கிட வேண்டும்.

அக்கரை செங்கப்பள்ளி கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு நிரந்தர கால்நடை மருத்துவர் வந்து செல்ல கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் காட்டு யானைகள் தொல்லை அதிகரித்து உள்ளது. அதே போல் காட்டு பன்றிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி விவசாய பயிர்களை நாசம் செய்வதோடு, போக்குவரத்து சாலைகளிலும் வாகன விபத்து ஏற்படுகிறது. இதுபோன்ற வனவிலங்குகளின் தொல்லை காரணமாக பல விவசாயிகள் விவசாய தொழிலை விட்டு தங்கள் நிலங்களை விற்றும், தரிசு நிலமாகவும் மாற்றிவிட்டனர்.

குறிப்பாக சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் வட்டார விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இப்பகுதி விவசாயிகள் மன உளச்சலில் உள்ளனர். பலரும் மாவட்ட கலெக்டரிடம் தங்களை கருணைக்கொலை செய்து கொள்ள அனுமதி அளிக்குமாறு மனுவும் கொடுத்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க