• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேயருக்கு ‘மறைமுக தேர்தல்’- அமைச்சரவையில் கூட்டத்தில் முடிவு?

November 19, 2019 தண்டோரா குழு

மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1996 ஆம் ஆண்டு மேயர் தேர்தல் முதல்முறையாக நேரடி தேர்தலாக நடத்தப்பட்டது. அதன்பிறகு 2006 ஆண்டுவரை மறைமுக தேர்தலாக மாற்றப்பட்டது. இதற்கிடையில் கடைசியாக நடந்த 2011 உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசு மேயர் தேர்தலை நேரடி தேர்தலாக அறிவித்தது. தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மேயர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அவரச சட்டத்தை கொண்டுவர தமிழக அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் 15 மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலை நடத்த அமைச்சரவை முடிவெடுத்து அவரச சட்டம் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க