• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேம்பால பணி காரணமாக கவுண்டம்பாளையத்தில் வரும் 5ல் மின் தடை

May 3, 2022 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் மற்றும் கவுண்டர்மில்ஸ் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கவுண்டம்பாளையம் பகுதியில் முழுவதுமாக மேம்பால பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஆனால் கவுண்டர்மில்ஸ் பகுதியில் மேம்பால பணிகள் நிறைவு பெறவில்லை.தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது.கவுண்டம்பாளையம் பகுதியில் அன்மையில் சர்வீஸ் சாலை அமைப்பதற்காக சாலையில் இடையூறாக இருந்த மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் மாற்றப்பட்டது.

இருப்பினும் ராமசாமி கல்யாண மண்டபம் அருகே மேம்பாலம் முடிவு பெறும் இடத்தில் மின் கம்பங்கள் மாற்ற வேண்டிய பணிகள் உள்ளன. அதே போல் கவுண்டர்மில்ஸ் பகுதியில் சர்வீஸ் சாலைகள் மற்றும் உயர்மட்ட பாலம் அமைக்க ஏதுவாக மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில் மேம்பால பணிகளுக்காக கவுண்டம்பாளையம் பகுதியில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் படி கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட தோமையன் வீதி-1,2,3, தயாளு வீதி, ஹவுசிங் யூனிட் முதல் கவுண்டம்பாளையம் சிக்னல் வரை, சிக்னல் முதல் கல்பனா தியேட்டர் வரை, யூனியன் ரோடு,பியூன்ஸ் காலனி உள்ளிட்ட பகுதியில் மேம்பால பணிக்காக வரும் 5ம் தேதி காலை 10 முதல் மதியம் 1 வரை மின் தடை ஏற்படும் என கோவை மின் பகிர்மான வட்டம் டாடாபாத் செயற் பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க