April 24, 2021
தண்டோரா குழு
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில்,TN 43 குழுமத்தின் நவீன வகை உணவகம், விடுதி,ஃபாஸ்ட் ஃபுட்,ஜூஸ் மற்றும் டீ கார்னர் உட்பட பெண்கள் குழந்தைகளுக்கான ஆடை மற்றும் பிரத்யேக பேஷன் பொருட்கள் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையிலான மினி மால் துவக்கப்பட்டுள்ளது.
கடந்த 1972 ல் துவங்கி ஊட்டியில் உணவகத்திற்கென தனி முத்திரை பதித்து, பின்னர் குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மேட்டுப்பாளையம், காரமடை என தனது கிளையை விரிவு படுத்தி உணவக பிரியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற TN 43 குழுமம் தனது புதிய மினி மால் வகையிலான உணவகம் மற்றும் தங்கும் விடுதியை மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் துவக்கியுள்ளது.
இதில் பிரத்யேகமாக முழுவதும் குளிரூட்டபட்ட மல்டி குஷைன் ரெஸ்டாரெண்ட்,விசாலாமான கார் பார்க்கிங் உடன் உயர் தரத்திலான சூட் வகை ரூம்கள் அடங்கிய தங்கும் விடுதி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பேஷன் பொருட்கள் மற்றும் ஆடை விற்பனையகம், இந்தியாவின் பிரபலமான மலைத்தேன் மற்றும் குருமிளகு,ஏலம்,பட்டை போன்ற மசாலா வகை பிரத்யேக ஸ்டால் என அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையிலான மினி மால் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து T.N 43.குழுமத்தின் இயக்குனர் முஜிபுர் ரஹ்மான் பேசுகையில்,
இங்கு முன்னனி டீ பிராண்டுகளின் ஓரிஜினல் வகை ஹாவுக்கல் தேயிலை விற்பனையக மையம் இந்தியாவிலேயே முதன் முறையாக இங்கு துவங்கியுள்ளதாகவும், குறிப்பாக உணவகத்தில் 99 வகையான புரோட்டா மற்றும் 99 வகையான தோசை வழங்குவதாக கூறிய அவர்,சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த மினி மாலை துவக்கி உள்ளதாக தெரிவத்தார்.
மேலும் எங்களது, பிரத்யேக சிக்கன் சவுர்மா,மற்றும் கிரில் சிக்கனை ஊட்டி செல்லும் அனைத்து மாநிலத்தவரும் சுவைத்து மகிழலாம் என தெரிவித்தார். தொடர்ந்து அவர்,ஹோம் மேட் குழுமத்தின் கீழ், கஃபே & ரெஸ்டாரண்ட், ஆலப்பி ஹவுஸ், அரேபியன் எக்ஸ்பிரஸ் என்ற மூன்று உணவகங்களில் கிடைக்கும் பிரத்யேக உணவுகளும் இங்கு ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த ரெஸ்டாரெண்ட் செயல்படும் என அவர் குறிப்பிட்டார்.