• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாக காரணமான சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் கைது

December 3, 2019 தண்டோரா குழு

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாக காரணமான சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்தனர்.

கோவை, மேட்டுப்பாளையம், நடூர் கண்ணப்பன் லே அவுட்டில் கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து 4 வீடுகளின் மேல் விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், சுற்றுச்சுவரைக் கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இச்சம்பவத்தில் வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்த உரிமையாளர் சிவசுப்ரமணியன்மீது விபத்து ஏற்படுத்துதல், பொது
சொத்துக்கு சேதம் ஏற்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அவர் தலைமறைவானார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சிவசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க