• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையத்தில் முதல்வர் பாதுகாப்பிற்கு வந்த காவலர் மயங்கி பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு

May 19, 2022 தண்டோரா குழு

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவையில் நிகழ்ச்சியினை முடித்து விட்டு உதகை செல்வதற்காக மேட்டுப்பாளையம் வந்தடைந்தார்.

இந்த நிலையில் முதல்வர் பாதுகாப்பிற்காக சேலத்தில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.இதில் சேலத்தை சேர்ந்த காவலர் ராஜாராம் என்பவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்
மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் பிளாக்தான்டர் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜாராம் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்ததார்.

இதனை கண்ட சக போலீசார் உடனடியாக பள்ளத்தில் விழுந்து காயமடைந்த காவலர் ராஜராமினை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். தலை மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க