• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையத்தில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 2 பெண்கள் உயிரிழப்பு

April 5, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நாடார் காலனியில் செல்வமுத்து மாரியம்மன்உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 3ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. இங்கு நடந்த பூஜைக்கு பின்னர்  பக்தர்களுக்கு அவல் சர்க்கரை,நெய் கலந்த பிரசாதம் கொடுத்தனர்.அப்போது,பிரசாதம் சாப்பிட 30 பேர் வாந்தி வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த சாவித்திரி 60 மற்றும் லோகநாயகி 65 ஆகியோர் மரணமடைந்தனர்.

இதையடுத்து,இடத்திற்கு தாசில்தார் ரெங்கராஜன் இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் இன்று சம்பவ சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.அப்போது, தீபம் ஏற்றுவதற்கான நெய் மூலம் பிரசாதம் செய்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க