• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையத்தில் இளைஞரை காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு

December 10, 2019 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் நடூரில் லட்சுமணன் என்ற இளைஞரை காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுற்றுசுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த பகுதியில் இன்னமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்த சிவலட்சுமணன் என்ற இளைஞருக்கும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிவலட்சுமணனை மேட்டுப்பாளையம் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் காயமடைந்த இளைஞர் லட்சுமணனுடன் மூத்த வழகறிஞர் ரத்தினம், தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழகறிஞர் ரத்தினம்,

மேட்டுப்பாளையம் நடூரில் லட்சுமணன் என்ற இளைஞரை காவல் துறையினர் அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர் எனவும் ,காவல் துறையினர் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.
17 பேர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை இன்னும் சேர்க்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், நடூரில் இளைஞர் சிவலட்சுமணன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய நடூர் பகுதியை இளைஞர் சிவலட்சுமணன்,

மரியாதை குறைவாக பேசிய காவல் துறையினரை மரியாதையாக பேசுங்க என்று சொன்னதற்காக காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் தாக்கினர் என குற்றம்சாட்டினார்.குச்சியை வைத்து தாக்கியதில் கை விரல்களில் காயம் ஏற்பட்டு அசைக்க முடியவில்லை என கூறிய அவர்,காவல் துறை மனசாட்சியே இல்லாமல் தன்னை தாக்கினார்கள் எனவும் ,உடையை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக நிற்க வைத்து போலீசார் தன்னை தாக்கினர் எனவும் தெரிவித்தார். சூ கால்களினால் எட்டி உதைத்து போலீசார் துன்புறுத்தினார்கள் எனவும் பின்னர் நள்ளிரவில் விடுவித்து விட்டனர் எனவும் சிவலட்சுமணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க