September 26, 2021
தண்டோரா குழு
மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மேட்டுப்பாளையம் இந்து முன்னணி மேற்கு நகர செயலாளர் சந்திரசேகர் (35) இவர் நரிபள்ளம் அடுத்த டிஏஎஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு இவரது வீட்டிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின் தொடர்ந்து பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் இரும்பு கம்பியால் சந்திரசேகரை தாக்கினர். இதில் தடுமாறி விழுந்த சந்திரசேகருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த கோவை போலீஸ் எஸ்பி செல்வநாகரத்தினம் விசாரணை நடத்தினார்.சந்திரசேகரை தாக்கியது யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.