March 6, 2018
தண்டோரா குழு
மேகாலயா மாநிலத்தின் புதிய முதல்வராக கன்ராட் சங்மா இன்று(மார்ச் 6)பதவியேற்றார்.
அண்மையில் நடந்து முடிந்த மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 21 தொகுதிகளை காங்கிரஸ் கைபற்றியது.இந்நிலையில், 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கிறது.
இதனையடுத்து நான்கு கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி மேகாலயாவில் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது.மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வராக கன்ராட் சங்மாவும், அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.இவர்களுக்கு அம்மாநில ஆளுநரான கங்கா பிரசாத் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.முன்னதாக மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.