கொல்கத்தாவில் உள்ள மெக்டோனால்ட்ஸ் உணவகத்தில் பிரெஞ்ச் பிரைஸில் பொறிக்கப்பட்ட நிலையில் பல்லி ஒன்றும் சேர்ந்து பரிமாறப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா மோயித்ரா எனும் கர்ப்பிணி தமது மகளுடன் மெக் டோனால்ட்ஸ் உணவகம் சென்றுள்ளார். அங்கு தனது குழந்தைக்கு பிரெஞ்ச் பிரைஸ் வாங்கிக் கொடுத்தார். அதனை சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை, அதனுள், நன்கு ‘ஃப்ரை’ செய்யப்பட்ட பல்லி இருந்ததைப் பார்த்தார்.6 மாத கர்பிணியான பிரியங்கா, சாப்பிடும் உணவில் வறுக்கப்பட்ட பல்லி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடை மேலாளரிடம் தகவல் தெரிவித்தார்.
ஆனால், அதற்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை.இதையடுத்து பிரியங்கா பல்லியை புகைப்படம் எடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.மேலும், குழந்தைகளும், 6 மாத கர்ப்பிணியான தாமும் பல்லி விழுந்த உணவை கவனிக்காமல் சாப்பிட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மெக்டொனால்ட் நிறுவனம், தனது உணவு சுகாதாரத்தில் ஏற்கனவே பல முறை கடும் சர்ச்சையில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்