• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூளை சலைவை செய்யப்பட்டாரா கோவையில் கடத்தப்பட்ட பெண்?

June 22, 2020 தண்டோரா குழு

கோவையில் அடித்து இழுத்து செல்லபட்ட பெண் தற்போது தன் தந்தை உடல் நல குறைவினை பார்க்க வந்ததாக பல்ட்டியடித்துள்ளார்.

கோவை வடவள்ளி ரோடு, இடையர்பாளையம், லூனா நகர், வித்யாகாலனியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திகேயன் (35) இந்து முதலியார் சமூகத்தை சேர்தவரும் , திருச்சி மாவட்டம் சஞ்சீவி நகரை சேர்ந்த சுந்தராஜ் என்பவரின் மகள் சக்தி தமிழினி பிரபா (25) தேவேந்திரகுல வேளாளர் சமூகதை சார்ந்த இவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 5-6-20 அன்று சுயமரியாதை திருமணம் செய்து கொண்டு கோவை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் முறையாக திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த திருமண தகவல்கள் முறையாக இரண்டு வீட்டு பெற்றோருக்கும் தெரிவித்ததில் பெண்ணின் பெற்றோர் இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்து விட்டனர். மணமகனின் பெற்றோர் இந்த திருமணத்தை முழு மனதுடன் ஏற்று கொண்டதையடுத்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் வடவள்ளி சாலை இடையர் பாளையத்தில் கார்த்திகேயனின் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டுநாட்களுக்கு முன் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்து கார்த்திகேயன் மற்றும் அவரது தாயாரை கோடூரமான முறையில் தாக்கிவிட்டு காதல் திருமணம் செய்த பெண்ணை வழுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளனர். இந்த நிலையில் திருச்சிக்கு காரில் கடத்தி சென்று ஆணவ கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருவதாக கூறும் கார்திகேயன் தரப்பு,பெண்ணை கடத்தி சென்ற அவரின் பெற்றோரை கைது செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தன. கார்த்திகேயனின் தாயார் தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

இதனையடுத்து, பெண்ணின் சொந்த ஊருக்கு சென்று பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.இந்த நிலையில் பெண் தன் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஊருக்கு வந்துள்ளாதாகவும் இரண்டு வாரத்தில் கோவைக்கு வந்துவிடுவதாகவும் போலிசாரிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.இதனிடையே நைட்டியுடன் இருந்த பெண் அடித்து இழுத்து செல்லபட்ட நிலையில் தற்போது மாற்றி பேசுவது மூளை சலைவை செய்துள்ளனரா அல்லது உயிர் பயம் காட்டி மிரட்டியுள்ளனரா என்ற சந்தேகம் வலுத்திருக்கின்றன.

மேலும் படிக்க