December 15, 2020
தண்டோரா குழு
மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வெட் கிரைண்டர்,மோட்டர் பம்புகளுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.தங்கம் விலை போல உயரும் மூலப்பொருட்கள் விலை உயர்வினால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும் மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், மூலப்பொருட்கள் இறக்குமதி மீதான வரிகளை குறைக்க வேண்டும் எனவும் கூறிய அவர்கள், விலை உயர்வை கட்டுப்படுத்த கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். குறுந்தொழில் முனைவோருக்கு தனிக்கடன் திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனவும், கோவையில் மூடப்பட்டுள்ள மூலப்பொருட்கள் சேமிப்பு கிடங்கான செயில் கிடங்கை திறக்க வேண்டும் எனவும் தொழில் அமைப்பினர் வலியுறுத்தினர்.