May 16, 2018
தண்டோரா குழு
பேஸ்புக் நிறுவனம் கடந்த மூன்றுமாதங்களில்மட்டும்58 கோடிபோலிமுகநூல்கணக்குகளை நீக்கியுள்ளதாகஅறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் பேஸ்புக். புகைப்படங்கள் மற்றும் வீடியோ பகிர்தல்,கருத்துகளை பகிர்தல் என நாள்தோறும் பேஸ்புக்கை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில்,முகநூலை பயன்படுத்தும் சுமார் 5 கோடி கணக்காளர்களின் விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டதாக புகார் பேஸ்நிறுவனம் சர்ச்சைகள் எழுந்தன. இதுமட்டுமின்றி திருடப்பட்ட தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பேஸ்புக் நிறுவனம் பெரும் சர்ச்சைகளை சந்தித்து வந்தது.
இதையடுத்து,பேஸ்புக் வலைத்தளத்தில் வன்முறை நோக்கத்தை தூண்டும் படங்கள், ஆபாச படங்கள் மற்றும் பயங்கரவாத கருத்துகளை வெளியிடும் முகநூல் கணக்குகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,அவ்வாறு வெளியிடப்படும் கணக்குகள் முடக்கப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 58.3 கோடி போலி முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதைபோல் ‘பேஸ்புக்’ கணக்காளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் அந்நிறுவனம் சுமார் 200 செயலிகளுக்கு தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.