• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல்நலக்குறைவால் காலமானார்

March 6, 2019 தண்டோரா குழு

பழம்பெரும் காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

பிரபல நடிகர் டைப்பிஸ்ட் கோபு. இவர் 1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபால ரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு என அடைபெயர் வந்தது. 1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தின் முதல் முறையாக திரைத்துறையில் அறிமுகமானார்.

அதன்பின், இவர் 50 ஆண்டுகளாக 600க்கும் அதிகமான திரைப்படங்கள், ஏராளமான நாடகங்களில் நடித்துள்ளார். அதைபோல் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். 85வயதான டைப்பிஸ்ட் கோபு. சென்னை அயப்பாக்கத்தில் மனைவி ராஜலட்சுமி, மற்றும் மகனுடன் வசித்து வந்தவர். இந்நிலையில், இன்று நலக்குறைவால் அவர் காலமானார்.

மேலும் படிக்க